எமது கவனக்குவிவு

வாக்குகளால் தெரிந்தெடுக்கப்பட்ட, எதேச்சாதிகார, பெரும்பான்மைவாத அரசொன்றினால் பலிகொள்ளப்பட்ட இன்னொரு நாடே இலங்கை. போர்க்குற்றங்களும் மானிடத்திற்கெதிரான குற்றங்களும் புரிந்ததற்கான முக்கிய சந்தேக நபரான கோத்தபாய இராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்றதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து ஒருதலைப்பட்டசமாக வெளியேறும் தனது முடிவை அறிவித்தார். அரசியல்-இராணுவ அதிகாரபீடமாக இயங்கும் இந்த அரசானது தனது மக்களுக்கெதிராக அது நடத்திய இனவழிப்புக்கும் கொடூரமான போருக்கும் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக வெகுமதிபெற்றிருக்கிறது. தற்போதைய பிரதம மந்திரியும், ஜனாதிபதியின் சகோதரரும், 2009லே ஜனாதிபதியாக இருந்தவருமான மகிந்த இராஜபக்ச, மே 2009லே நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான உள்நாட்டுப் பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவதையும் இணக்கப்பாடு காணப்படுவதையும் உறுதிசெய்வதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலர் பான் கீ மூனிடம் வாக்களித்திருந்தார். இவர்களின் சிலவராட்சியின்கீழ் முனைப்புப் பெற்றிருந்த தண்டனைப்பயமற்ற தன்மை, தற்போது கோவிட்-19 பெரும்பரப்புத்தொற்றால் மேலும் மோசமடைந்து, பொதுமக்கள் விடயங்களிலே இராணுவம் தலையிடும் நிலைக்கும் போரின் உச்சத்தில் இருந்ததைவிடப் பலம்வாய்ந்த இராணுவம் உருவாவதற்கும் வழிவிட்டுள்ளது. போரின் பின்னான அரசுகள் - போர்க்காலத்தில் மாற்றுக் கருத்தாளர்களையும், அரசியல் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும் பெருமெண்ணிக்கையில் கொன்றொழிக்கப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான்களைத் தவிர்த்து - மிக நுணுக்கமான போரியற் பறகலன்களையும் புலனாய்வுக்குழுக்களையும் கொண்டு மேலும் வினைத்திறம் பெற்றுள்ளன. முரண்நகையாக, தமிழர்களையும் முஸ்லிம்களையும் கருத்துமாறுபாட்டுக்காகக்கூட கைதுசெய்வதற்கான ஆயுதமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் மாற்றுக்கருத்துரைக்கும் குரல்களை நசுக்குவதிலும், நிலைமாறு நீதியையும் அரசியற் தீர்வுகளையும் தமிழர்களுக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் வழங்க மறுப்பதிலும் கட்டமைப்புரீதியான இனவழிப்புக்கான பேரியந்திரம் தொடர்ந்தும் ஓய்வின்றி விசையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. தற்போதைய அரசானது கட்டுப்பாடுகளற்றவகையிலே ஜனாதிபதியின் கையில் அதிகாரங்களைக் குவிக்க முனைவதோடு, பேராபத்தான இனப்பெரும்பான்மைவாதக் கொள்கையை முன்னெடுத்து தீவிர தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் தூண்டுகிறது.

எனவே, தொடரும் திட்டமிட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்தவும், 2009ன் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவும் என ‘சட்டப்போர்’ மூலம் நிலைமாறு நீதி எய்தப்படுவது முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஆதாரமான விடயங்களைத் தீர்ப்பதற்கும் வன்முறைகள் மீண்டும் நிகழ்வதைத் தடுப்பதற்கும் நிலைமாறு நீதி அத்தியாவசியமானது. உலகளாவிய சட்ட ஆட்சி மூலமாக, நிலைமாறு நீதிக்கான படிமுறையை முன்னகர்த்தி, தமிழர்களின் மீதான இனவழிப்புக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் வேண்டி, அதன் மூலம் மீள்நிகழாமைக்கான உத்தரவாதத்தையும் நிகழ்ந்தவைக்கான இழப்பீடுகளையும் பெற்று, அரசமைப்புச்சட்டத்திலும் பாதுகாப்புத்துறைசார்ந்தும் சீரமைப்புகளை உருவாக்குவதே தமிழர் உரிமைக்கான குழுமமான எங்கள் நோக்கமாகும். இலங்கையில் தமிழர்களும் ஏனைய குறிவைத்துத்தாக்கப்படும் குழுவினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் எதிர்க்கவும், தீர்மானங்களை எட்டும் படிமுறைகளில் பங்கெடுக்கவும் ஏற்றதொரு தளத்தை உருவாக்கவும் நாம் விளைகிறோம்.

It is thus vital that transitional justice is achieved through lawfare in order to hold those responsible for the carnage of 2009 and put a stop to the ongoing systemic genocide. Transitional justice is imperative in addressing fundamental issues of the ethnic conflict in Sri Lanka and preventing the re-emergence of violence. We, the TRG, seek to carry forward the transitional justice process through universal jurisdiction to ensure justice and accountability for the systemic genocide of Eelam Tamils, achieve guarantees of non-recurrence and reparations, and to advocate and work for constitutional and security sector reform. We also aspire to create a platform in Sri Lanka for Eelam Tamils and other targeted groups to come together, engage in discourse, challenge discrimination and injustice, and participate in decision-making processes.