எம்மைப்பற்றி

‘சட்டப்போர்’ பொறிமுறைகளைப் பயன்படுத்தி நிலைமாறு நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் எய்துவதே எமது நோக்கம். இலங்கையில் வாழும் அனைத்துத் தேசிய இனங்களினதும் குறிவைத்துத்தாக்கப்படும் குமுகங்களினதும் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை உறுதிசெய்வதோடு, அவர்களின் மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்தவும் நாம் முனைகிறோம். கடந்த காலத்தைய அத்துமீறல்களையும் மனத்தாங்கல்களையும் அங்கீகரித்து நீதி வழங்குதலானது உருப்படியான முறையிலே முன்னகர்வதற்கு இன்றியமையாதது என நாம் நம்புவதோடு ஏற்றுக்கொள்கிறோம். இலங்கையின் பொதுவெளியைப் பலப்படுத்தி, காத்திரமான கலந்துரையாடல்களுக்கும் ஊடாடல்களுக்குமான தளத்தை உருவாக்குவதன்மூலம் உள்நாட்டுக் குமுகங்களே அரசியற் தீர்வுகளை வளர்த்தெடுத்துச் செயற்படுத்துவதற்கு ஆவன செய்வதும் சக்திவழங்குவதும் எமது நோக்கமாகும்.