எமது முன்கதை

2015ல் தானும் இணைந்து கைச்சாத்திட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றும் கடமையிலிருந்து இலங்கை அண்மையில் ஒருதலைப்பட்சமாக வெளியேறியுள்ளபோதும், நிலைமாறு நீதிக்கான செயற்பாட்டை முன்னகர்ந்தவென முனைப்போடு தொடர்ந்து இயங்கிவரும் பாதிக்கப்பட்டவர்களையும், தாயக மற்றும் புலம்பெயர் தமிழ்க்குமுகங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களையும் வல்லுனர்களையும், மற்றும் நலன் விரும்பிகளையும் ஒற்றிணைப்பதே தமிழர் உரிமைக்கான குழுமம்.

இலங்கையின் தற்போதைய அரசானது, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும் மனித உரிமைச் சட்டங்களையும் மீறும்வகையிலான போரை தனது மக்கள்கூட்டத்தின்மீதே தொடுத்ததற்குப் பொறுப்பாயிருந்தபோதும், பாரதூரமான அனைத்துலகக் குற்றச்செயல்களுக்கும், போரின் நடத்துகைக்கும், மக்கள் கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டதற்கும், கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல்போனதற்கும் பொறுக்புக்கூற அக்கறையின்றியுள்ளது.

இலங்கை அரசானது பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறைகளின் தோல்விக்கெனப் பல தசாப்தங்களாக அவப்பெயரெடுத்துவருவதோடு, தண்டனைப்பயமற்ற சூழலை தொடர்ந்தும் பேணிவருகிறது. இலங்கை அரசின் குற்றத்தன்மையை நிறுவ நாட்டின் நீதித்துறையானது மீண்டும் மீண்டும் தவறிவருவதானது அவர்கள் மனித உரிமை மீறல்களுக்கும் பாரதுரமான அத்துமீறல்களுக்கும் உள்ளானவர்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் வழங்கத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

தனது ஒப்பிய பொறுப்புக்களிலிருந்து பின்வாங்குவதான இலங்கையின் முடிவும், நிலைமாறு நீதிதொடர்பாக எட்டப்பட்ட சிறிய முன்னேற்றங்கள்கூட மீள்வாங்கப்பட்டமையும், சுயாதினமான அனைத்துலக நீதிக்கான பொறிமுறையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் முன்னெடுக்கப்டவேண்டும் எனக் கோருவதைத்தவிர, வேறு எந்தத் தெரிவுகளையும் எமக்கு விட்டுவைக்கவில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடரும் சச்சரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்குச் சேரவேண்டிய நீதியைப் பெறுவதை உறுதிசெய்யும் பொறுப்புக்கூறற் பொறிமுறையொன்றை உருவாக்குவது உட்பட்ட காத்திரமான தீர்வொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் செயற்குழு முன்வைக்கவேண்டியது அவசியம்.

ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தங்கள் மதிக்கப்படவேண்டும் என்பதிலும் இயல்புரிமைகளும் மனித உரிமைகளும் பேணப்படவேண்டும் என்பதிலும் தமிழர் உரிமைக்கான குழுமம் திடமாய் உள்ளது. அண்மையில், நாடாளுமன்ற மக்களாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், பொதுமக்கள்சார் அரசியற்செயற்பாடுகளுக்கான வெளிகள் சுருக்கப்பட்டமையும், மாற்றுக்கருத்துள்ளவர்கள்மீது தொடுக்கப்படும் தாக்குதல்களும், தமிழ் ஊடகவியலாளர்கள்மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களும், ஆக்கிரமிப்புப் படைகளின் பெருகிவரும் இடையூறுகளுக்கிடையில் கட்டமைப்புரீதியான இனவழிப்புக்கு முகங்கொடுத்துள்ள தமிழர்களின் உயிர்வாழ்வுக்கான ஏதுநிலையை மேலும் பின்தங்கச் செய்துள்ளது. அண்மைக்காலங்களில், முஸ்லிம் மக்கள்மீதான அதிகரித்துவரும் ஒடுக்குமறைகளையும், இனரீதியான தாக்குதல்களையும், இராணுவப் பண்பாட்டின் தலைதூக்கத்தையும், காவல்துறையினரின் வன்முறைகளையும், மாற்றுக்கருத்துக்களும் அடிப்படை உரிமைகளும் மென்மேலும் ஒடுக்கப்படுவதையுங்கூட தமிழர் உரிமைக்கான குழுமம் கவனித்தே வருகிறது.

The intensification of national oppression of  Eelam Tamils further warrants the need to establish TRG at this historical moment. It is dedicated to achieving justice and accountability through transitional justice processes and lawfare. The TRG is also a space for active collaboration between those who have been at the forefront of the Eelam Tamil political struggle, young activists, and advocates, thus bridging the gap between different generations.

தமிழர்கள்மீதான தேசியமயப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையானது, இந்த முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் தமிழர் உரிமைக்கான குழுமம் உருவாக்கப்படவேண்டியதன் தேவையை மேலும் அதிகரிக்கிறது. நிலைமாறு நீதிக்கான பொறிமுறைகள் மற்றும் ‘சட்டப்போர்’ செயற்பாடுகள் ஊடாக நீதியையும் பொறுப்புக்கூறலையும் அடைய தமிழர் உரிமைக்கான குழுமம் தன்னை அர்ப்பணிக்கிறது. தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்களையும், இளம் செயற்பாட்டாளர்களையும், பரிந்துரைஞர்களையும் ஒருங்கிணைத்து பல்வேறு தலைமுறைகளுக்குமிடையிலான இடைவெளிகளுக்குப் பாலமிட்டு அவர்கள் செயற்திறனுடன் ஒத்துழைப்பதற்கானதொரு பொதுவெளியாகவும் தமிழர் உரிமைக்கான குழுமம் இயங்கும்.